ஊட்டியில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் கண்காணிப்பு

ஊட்டியில் ‘ட்ரோன்’ மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2021-05-24 21:25 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நேற்று ஊட்டியில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை ஒட்டி தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்களா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 தொடர்ந்து முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் (குட்டி விமானம்) கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். இதன் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- முழு ஊரடங்கில் இளைஞர்கள் கூட்டமாக நின்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். நீலகிரியில் முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே வந்த 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

மேலும்  இதுவரை முககவசம் அணியாததாக 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக- கர்நாடகா மாநில எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் 3 வாகனங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்