தனியார் பஸ் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தனியார் பஸ் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-05-24 21:25 GMT
கோத்தகிரி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவசியமின்றி பொதுமக்கள் வாகனங்களில் வெளியே சுற்றுவதைத் தடுக்க கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால், கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று காலை கோத்தகிரி அருகே பாண்டியன் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். 

இதில், அந்த பஸ்சில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடுதல் பயணிகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கீழ் கோத்தகிரி பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 3 வாகனங்களில் செல்ல இ-பதிவு செய்து விட்டு, ஒரே பஸ்சில் அனைவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்று விட்டு திரும்பியது தெரியவந்தது. 

இதனையடுத்து ஊரடங்கை மீறி, சமூக இடைவெளியின்றி கூடுதல் பயணிகளை ஏறி வந்த, அந்த பஸ்சின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்