லேப் டெக்னீசியன் மாணவிகள் போராட்டம்

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியன் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.

Update: 2021-05-24 20:44 GMT
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியன் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆர்ப்பாட்டம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியன் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் தங்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மாணவர்களின் தங்கும் விடுதி அருகே கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும். முக கவசம், சானிடைசர் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். மாணவிகளின் ஆர்ப்பாட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்