புளியரை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புளியரை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-24 19:55 GMT
செங்கோட்டை:

புளியரை அருகே இரவியதர்மபுரம் கிராமத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் கேரளாவை சேர்ந்த முகேஷ் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகுட்டி (வயது 21). இருவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஸ்ரீகுட்டி, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்ரீகுட்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்தார். தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்