மானூர் அருகே வாகனம் மோதி 2 மான்கள் சாவு
மானூர் அருகே வாகனம் மோதி 2 மான்கள் இறந்தன.;
மானூர்:
மானூர் அருகே உள்ள குவாரி பகுதியில் நேற்று 2 மான்கள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டை கடக்க முயன்றன. அப்போது சாலையில் வேகமாக வந்த ஒரு வாகனம் எதிர்பாராமல் மான்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 மான்களும் சம்பவ இடத்திலேயே இறந்தன.
இதுகுறித்து தகவலறிந்ததும் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் கங்கைகொண்டான் வனத்துறையினர் விரைந்து வந்து, இறந்து கிடந்த மான்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.