பழவூரில் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பழவூரில் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-24 19:33 GMT
வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா முழு ஊரடங்கை மீறி பழவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று பஜார் பகுதியில் ரோந்து வந்த போது, ஊரடங்கை மீறி வெளியே சுற்றிக் கொண்டிருந்த ஒருவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்