கொரோனா பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம்

அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2021-05-24 19:19 GMT
சாத்தூர்
அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை எளிதில் கட்டுப்படுத்தலாம் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். 
காய்கறி வாகனம் 
சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில்  சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், சாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், மாவட்ட பிரதிநிதி செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக  கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தமிழக அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றினால் கொரோனா பரவலை எளிதில் தடுக்கலாம் என கூறினார். 
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனித்தனியாக நடைபெற்றது. 
 

மேலும் செய்திகள்