மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

செட்டிநாடு பகுதியில் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-24 19:05 GMT
காரைக்குடி,

செட்டிநாடு போலீஸ் சரகம் காயம்பட்டி- கொத்தமங்கலம் சாலையில் கிராவல் மண் திருடி கடத்தி செல்வதாக தொடர்ந்து நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி இது குறித்து செட்டிநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றைக் கொண்டு ஒரு கும்பல் கிராவல் மண்ணை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே செட்டிநாடு போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.அப்போது டிப்பர் லாரி டிரைவர் திருமயத்தை சேர்ந்த யோகேஸ்வரன் தப்பி ஓடிவிட்டார்.
பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த தேவகோட்டையை சேர்ந்த டிரைவர் தனுஷ் (வயது 22) பிடிபட்டார்.லாரி உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்து கிராவல் மண் திருட்டை நடத்திய புலிவலத்தை சேர்ந்த ஸ்ரீராம் தலைமறைவாகிவிட்டார். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்