நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு; பலி எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்.;

Update: 2021-05-24 18:29 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 188 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் வெப்படையை சேர்ந்த 64 வயது மூதாட்டிக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென இறந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த 4 பேர் இறந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் என்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்