மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2021-05-24 18:18 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் கீழ் ஒரத்தைகாலனியை சேர்ந்தவர் ராணி (வயது 54). இவர் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது அக்கா கணவர் சேங்கல்பாளையம் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (52) என்பவருடன் அவரது மோட்டார் சைக்கிளில் ராணி பின்னால் அமர்ந்துகொண்டு வேலைக்காக சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று ராணி, சுப்பிரமணி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், கார் டிரைவர் நலக்கட்டியூர் எம்.ஆர். நகரை சேர்ந்த லோகநாதன் (43) என்பவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்