ஊரடங்கை மீறிய 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஊரடங்கை மீறிய 30 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
லாலாபேட்டை
லாலாபேட்டை பகுதியில் முக்கிய வீதிகளில் போலீசார் நின்று கொண்டு வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்த 30 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்கள் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைபோன்று தொடர்ந்து தேவையில்லாமல் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.