கரூர் மாவட்டத்தில் தெரு, தெருவாக நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை

கரூர் மாவட்டத்தில் தெரு, தெருவாக நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-05-24 17:51 GMT
கரூர்
காய்கறிகள் விற்பனை
முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததால் கரூர் மாவட்டத்தில் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில்  உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் கரூர் நகரப்பகுதியில் தெரு, ெதருவாக நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. 
இதேபோல கரூர், வெங்கமேடு, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் வீடு, வீடாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை கரூர் வேளாண் உதவி இயக்குனர் ராஜவேல் தொடங்கி வைத்தார்.  காளிபாளையம் உற்பத்தியாளர் குழுத்தலைவர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் கடைவீதிகளுக்கு செல்லாமல் நேற்று தங்களது வீட்டின் அருகில் தேவையான பொருட்களை வாங்கியதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து வருகிற 31-ந்தேதி வரை இதேபோல காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகள்