கோத்தகிரியில் ஊரடங்கை மீறியதாக 12 வாகனங்கள் பறிமுதல்
கோத்தகிரியில் ஊரடங்கை மீறியதாக 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோத்தகிரி,
முழு ஊரடங்கையொட்டி கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று கோத்தகிரி பஸ் நிலையம், டானிங்டன், மார்க்கெட் திடல், பாண்டியன் பூங்கா மற்றும் கட்டபெட்டு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறியதாக ஒரு லாரி உள்பட கார்கள், மோட்டார் சைக்கிள் என மொத்தம் 12 வாகனங்கைள போலீசார் பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு நேரத்தில் யாரும் அவசியமின்றி வெளியே சுற்றித்திரிய கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.