டாஸ்மாக் ஊழியர் கொரோனாவுக்கு பலி

டாஸ்மாக் ஊழியர் கொரோனாவுக்கு பலி

Update: 2021-05-24 16:12 GMT
கோவை

கோவை உருமாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). இவர், டாஸ்மாக் மதுக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19-ந் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அப்போது அவர் அணிந்து இருந்த மோதிரம், பர்ஸ் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து உறவினர்கள், உடலை வழங்கிய ஊழியர்களிடம் கேட்டு உள்ளனர்.

 அதற்கு அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து இளங்கோவனின் உறவினர்கள் கொ
டுத்த புகாரின் பேரில் கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், ஊழியர்களிடம் விசார ணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களிடம், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறி உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்