விளாத்திகுளம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3பேர் கைது
விளாத்திகுளம் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்துகுளம் அருகே சங்கரலிங்கபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் என்.வேடப்பட்டி மற்றும் நாகலாபுரம் சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து சென்றனர். அப்போது வேடப்பட்டியைச் சோந்த உத்தண்டுசாமி (வயது46), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (46), நாகலாபுரம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த விஜயராஜ் (51) ஆகியோர் தங்கள் கடைகளில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து, அவர்களின் கடைகளிலிருந்து 456 புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.