கோவில்பட்டியில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கோவில்பட்டியில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வாகனங்களில் காரணம் இன்றி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
போலீசார் கண்காணிப்பு
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க நேற்று முதல் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத் தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டன. மருந்து, பால் கடைகள் திறக்கப் பட்டிருந்தன.
இதனால் பெரும் பாலான சாலைகள், பேருந்து நிலையங்கள் வெறிச் சோடி காணப் பட்டன. கோவில்பட்டி காவல் உட்கோட் டத்துக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, தங்க ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பேரிகார்டுகள் வைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
போலீசார் எச்சரிக்கை
சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை விசாரித்து, உரிய காரணங்களுடன் வந்தவர்களை உடனடியாக அனுப்பி வைத்தனர். அதே போல், காரணம் இன்றி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து திரும்ப அனுப்பி வைத்தனர். அப்போது விவசாய பணி, பால் கேன் கொண்டு சென்றவர்களிடம் கொரோனா பாதுகாப்பு குறித்தும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், போலீசார் பல்வேறு பகுதி களுக்கு ரோந்து பணியிலும் ஈடுபட்டு, ஆங்காங்கே தெருக்கள், சாலை யோரங்களில் கூடி நின்றவர் களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனாலும், சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் வலம் வந்த வண்ணம் இருந்தனர்.