முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2021-05-24 00:51 GMT
கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். 

கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது:-

நாளை (இன்று) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கிற்கு  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். பொதுமக்கள் நலன் கருதி 2 நாட்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

 கோவை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கின் போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பால், காய்கறி, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

கொரோனா தொற்றுக்காக பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து துறை பணியாளர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்