கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை நிறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிநபர் இடைவெளி இல்லாமல் கார்களில் பயணிப்பவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.