அந்தியூர் அருகே கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலி

அந்தியூர் அருகே கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்.;

Update:2021-05-24 05:44 IST
அந்தியூர்
அந்தியூர் அருகே கொரோனாவுக்கு பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்.
கொரோனாவுக்கு பலி
அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 50 வயது ஆண். இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். இதில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த 16-ந் தேதி முதல் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
4 பேர் சாவு
இதேபோல் அந்தியூர் தேர் வீதி பகுதியை சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 13-ந் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அத்தாணி பகுதியைச் சேர்ந்த 47 வயது ஆண் கடந்த 10 நாட்களாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று உயிரிழந்தார். அந்தியூர் புதுப்பாளையம் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் 57 வயது பெண். இவர் நேற்று முன்தினம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது ஆண். இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அந்தியூர் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தது பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்