ஓசூர் அருகே வாலிபர் அடித்து கொலை-ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேர் கைது
ஓசூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 20). இவர் ஓசூரில் உள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் வீக்கோட்டா பகுதியில் ஒரு வழக்கில் சூர்யாவிற்கு தொடர்பு இருப்பதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் சோமநாதபுரம் கிராமத்திற்கு சென்று விசாரித்தனர்.
தாக்கினார்கள்
இந்த நிலையில் கடந்த வாரம் சோமநாதபுரம் கிராமத்திற்கு சென்ற சூர்யாவை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சூர்யாவை அந்த கிராமத்தை சேர்ந்த எல்லப்பா (23) என்ற வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கொலை
இந்த சம்பவம் குறித்து சூர்யா, தனது சித்தப்பாக்களான சதா மற்றும் சுதர்சன் ஆகியோரிடம் கூறி எல்லப்பாவை பழி வாங்க திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சூர்யா, எல்லப்பாவை மது அருந்த அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் எல்லப்பாவை சூர்யா, சதா, சுதர்சன் ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து அவரது உடலை அங்கிருந்த ெரயில் தண்டவாளத்திற்கு அருகே வீசி சென்றனர்.
கைது
நேற்று முன்தினம் இரவு முழுவதும் எல்லப்பா வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு சூர்யா, சுதர்சன் ஆகிய இருவரையும் நேற்று இரவு பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் எல்லப்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரையும் போலீசார் செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின்பேரில் ரெயில் தண்டவாளத்தின் அருகே கிடந்த எல்லப்பாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஐ.டி.ஐ. மாணவர் சூர்யா மற்றும் சுதர்சனிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாகி உள்ளசதா என்பவரை தேடி வருகின்றனர்.