சேலம் மாநகர காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகர காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தொடங்கி வைத்தார்;

Update: 2021-05-23 23:11 GMT
சேலம்:
சேலம் மாநகரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அது சம்பந்தமாக பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளப்பட்டி மற்றும் அழகாபுரம் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க நிகழ்ச்சி பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று நடந்தது. இதில், சேலம் மேற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் கலந்து கொண்டு 10-க்கும் மேற்பட்ட கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் நித்யா, அழகாபுரம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்