ஏற்காட்டில் ஊரடங்கில் இயங்கிய தங்கும் விடுதிக்கு ‘சீல்’
ஏற்காட்டில் ஊரடங்கில் இயங்கிய தங்கும் விடுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஊரடங்கு காலத்தில் தங்கும் விடுதி நடத்தப்படுவதாக ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு உமாசங்கர், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் தங்கும் விடுதிக்கு ‘சீல்’வைத்தனர்.