தென்காசியில் கொரோனாவுக்கு 11 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியானாா்கள்.

Update: 2021-05-23 21:22 GMT
தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. நேற்றும் 11 பேர் பலியாகியுள்ளனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது, 63 வயது, 75 வயது பெண்கள் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது, 76 வயது, 58 வயது, 37 வயது, 70 வயது ஆண்களும், நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயது மூதாட்டி உள்பட மாவட்டத்தில் மொத்தம் 11 பேர் பலியானார்கள். இதனால் பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர தென்காசி மாவட்டத்தில் நேற்று 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 341 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 200 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்