கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2021-05-23 21:19 GMT
ஆலங்குளம், மே:
ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 30 பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, செயற்பொறியாளர் ஜானி, நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 5-வது வார்டு காளியம்மன் கோவில் முன்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கடையம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள கடல் பேஷன் வணிக வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜசேகர், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் புளி கணேசன், கீழ மாதாபுரம் வினோத், ஆலங்குளம் கணபதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்