பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-23 21:10 GMT
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் அருகே உள்ள ராமசாமியா புரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (வயது 21). டிப்ளமோ பட்டதாரியான இவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் முருகன் கடந்த ஒரு வாரமாக கார்த்திக்கிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்