நெல்லையில் 486 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-க்கு கீழ் வந்தது. 486 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. 33 ஆயிரத்து 120 பேர் குணமடைந்துள்ளனர். 1,352 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 6 பேர் பலியானார்கள். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயது பெண், 52 வயது, 57 வயது, 65 வயது ஆண்கள், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 40 வயது ஆண் மற்றும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது முதியவர் என மொத்தம் 6 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.