கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 818 பேர் பாதிப்பு - மேலும் 2 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 818 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.;

Update: 2021-05-23 20:16 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 42 வயது ஆண். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 20-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 21-ந் தேதி இறந்து விட்டார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 21-ந் தேதி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 210 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 19 ஆயிரத்து 157 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8 ஆயிரத்து 714 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்