மதுரை, மே.24-
மதுரை பெருங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மருத்துவமனை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வலையங்குளம் பகுதியை சேர்ந்த முத்துமணி(வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.