1346-வது பிறந்தநாளையொட்டி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346-வது பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346-வது பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
நாட்டின் விடுதலைக்காகவும் சமுதாய மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் சிலைகளுக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலை ஒத்தக்கடை சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
இதுபோல் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி ஆகியோர் தலைமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.கிருஷ்ணன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் உருவப்படத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.