கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி?
கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலியானார்.
திருச்சி,
கருப்பு பூஞ்சை நோயால் திருச்சி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 6 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரியிடம் கேட்டபோது கருப்பு பூஞ்சை நோயால் இறந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை என்று கூறினார்.