லால்குடியில் சாராய ஊறல் போட்ட முதியவர் கைது

லால்குடியில் சாராய ஊறல் போட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-23 19:50 GMT
லால்குடி,
லால்குடி அருகே வழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 61). இவர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள வயலில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் சாராயம் காய்ச்ச தங்கராசு ஊறல் போட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் 50 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். அத்துடன் தங்கராசுவையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்