மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த குமாரை(வயது 42) மணப்பாறை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மாலைமடைபட்டியைச் சேர்ந்த லோகநாதன் (48) சட்டவிரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.