ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு உள்ளது. இதன் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் ஒரு பெண் காட்டு எருமையும், இரண்டு ஆண் காட்டு எருமைகளும் வந்தன. அப்போது திடீெரன 2 ஆண் காட்டு எருமைகள் ஒன்றுக்ெகான்று சண்டை போட்டு கொண்டன. அப்போது பெண் எருமை அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த சண்டையில் பலத்த காயமடைந்த 6 வயதுடைய ஆண் காட்டு எருமை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் (பொறுப்பு) செல்வமணி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியிலேயே எருமைக்கு கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.