சிவகாசியில் 48 பஸ்கள் இயக்கம்

சிவகாசியில் இருந்து 48 பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-05-23 19:44 GMT
சிவகாசி, 
தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு 1 வாரம் கடைபிடிக்கப்படுவதால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இன்று காலை வரை பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைத்தூரங்களுக்கும், உள்ளூர்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. சிவகாசியில் நேற்று முன்தினம் மாலை 4 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. பின்னர் நேற்று அதி காலை 4 மணி முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டது. கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, கோவில்பட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு 26 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போல் சிவகாசியில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியை சுற்றி உள்ள கிராமப்பகுதிகளுக்கு 22 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. சிவகாசி பணி மனையில் இருந்து 48 பஸ்கள் இயக்கப் பட்டது. அதேபோல் மற்ற பணிமனை பஸ்களும் சிவகாசிக்கு வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு பிறகு மதுரைக்கு புறப்பட்டு சென்ற பஸ்கள் இன்று காலை மதுரையில் இருந்து சிவகாசிக்கு பயணிகளை ஏற்றி வர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் 4 பஸ்கள் மதுரை பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை 3 மணி வரை மதுரையில் இருந்து சிவகாசிக்கு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் சிவகாசிக்கு காலை 6 மணிக்கு வரும். அதன் பின்னர் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளர் மாரியப்பன் தெரிவித்தார். சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற பஸ்களிலும், வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு வந்த பஸ் களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று சுபமு கூர்த்த நாள் என்பதால் பலர் மாவட்டம் முழுவதும் நடந்த சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஸ்பயணம் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்