கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2021-05-23 18:28 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் புகளூர் அருகே வள்ளுவர் நகர் பகுதியில் கொரோனா தொற்றை கண்டறியும் வகையில் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி, டாக்டர் அனிதா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு  ரத்த மாதிரி எடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடலில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்