லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-23 18:20 GMT
குளித்தலை
குளித்தலை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை காந்தி சிலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 46), குளித்தலை கம்மாளர் தெருவை சேர்ந்த சேகர் (52) ஆகியோர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ‌.600-ஐ போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்