கடைவீதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்
இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் நேற்று கடை வீதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி,
இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் நேற்று கடை வீதிகளில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்தனர்.
முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வைத்து கொள்ள ஏதுவாக நேற்று முன்தினமும், நேற்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிப்பு செய்து இருந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகலில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. 2 நாட்கள் பஸ்கள் இயக்கலாம் என்ற உத்தரவால் நேற்று மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சத்தால் பஸ்களில் பயணம் செய்வதை பெரும்பாலானோர் தவிர்த்தனர்.
அலைமோதிய பொதுமக்கள்
ஒருவாரம் தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை வாங்கி வைத்து கொள்ள மளிகை கடைகளின் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்தனர். பெரும்பாலான மக்கள் முககவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அரசு பஸ்களும் வழக்கம் போல இயங்கின. ஆனால் அதில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். கடைவீதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
விலை உயர்வால் அதிர்ச்சி
இதனால் பொருட்கள் வாங்க வந்த நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கி இருப்பு வைத்து கொள்ளலாம் என நினைத்தவர்கள் கால் கிலோ, அரைக்கிலோ என்று வாங்கி சென்றனர். முழு ஊரடங்கை காரணம் காண்பித்து அதிக விலைக்கு காய்கறிகளை வியாபாரிகள் விற்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். காரைக்குடி அண்ணா தினசரி மார்க்கெட், வைரவபுரம் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறி வாங்க ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கல்லுக்கட்டி, செக்காலை உள்ளிட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கினார்கள