ஊராட்சி தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
உலகம்பட்டியில் ஊராட்சி தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
எஸ்.புதூர்,
இதில் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வீட்டை விட்டு வெளியே வராமல் அறிவுறுத்துதல், வெளியூர்களில் இருந்து வரும் ஆட்களை தனிமைபடுத்துதல், தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்தல், முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவும், கிராம மக்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்டவைகள் ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் உலகம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்.புதூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்விழி நாகராஜன், சரவணன், அருண்பிரசாத், ஜோதி பித்திரை செல்வம், அழகம்மாள், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.