திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1000-ஐ தாண்டி உள்ளது.
திருவண்ணாமலை
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கை போலீசார், வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
1000-ஐ தாண்டியது
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1006 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை 35 ஆயிரத்து 485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 28 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 6 ஆயிரத்து 221 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 382 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.