255 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் 255 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப் பட்டது. 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-05-23 17:08 GMT
ராமநாதபுரம், 
மாவட்டத்தில் 255 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப் பட்டது. 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 255 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 14 ஆயிரத்து 411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 185 பேர் வீடு திரும்பி உள்ளனர். 
இதுவரை 10 ஆயிரத்து 975 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 252 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 184 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
4 பேர் பலி
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 45 மற்றும் 40 வயது ஆண்கள் மற்றும் 62 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க பெண்கள் என 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்