வடபொன்பரப்பிசங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 8 பேர் கைது
வடபொன்பரப்பிசங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 8 பேர் கைது
சங்கராபுரம்
வடபொன்பரப்பி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராயசமுத்திரத்தில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்த சாமிநாதன் மகன் இளையராஜா(வயது 37), மணலூரில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பரமசிவம் மகன் ராபர்ட்(30), ரங்கப்பனூரில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நாராயணசாமி(58) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்தலி, ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் புதுபாலப்பட்டு, வரகூர், சோழம்பட்டு, வடபாலப்பட்டு ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசு(வயது 33), வரகூர் கிராமம் கண்ணன்(46), சோழம்பட்டு கார்த்திக்(20) வடபாலப்பட்டு கிராமம் முருகன் (35) சக்திவேல் (32) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.