மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி மும்முரம்

மடத்துக்குளம் அருகே குடிநீர் குழாய் பதிக்கும் பணி மும்முரம்

Update: 2021-05-23 16:17 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே உள்ள  கணியூர், துங்காவி, காரத்தொழுவு, கடத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு பகுதியில் குழாய் பதிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. 
இது குறித்து தினத்தந்தியில் செய்தி பிரசுரமானது. இதனையடுத்து கணியூர்- மடத்துக்குளம் நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதிகளில்,திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்