ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததற்கு அரசின் தவறான முடிவுகளே காரணம் சித்தராமையா குற்றச்சாட்டு

ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததற்கு அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-05-23 16:05 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 14 நாட்கள் ஆகிறது. ஆயினும் கொரோனா பரவலின் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு கடந்த வாரம் வரை தினசரி 1.75 லட்சம் பரிசோதனைகளை நடத்தியது. ஆனால் அந்த எண்ணிக்கையை 1 லட்சத்திற்கும் கீழ் குறைத்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தியதால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், பரிசோதனைகளை குறைத்ததால் தான் பாதிப்பு குறைந்தது போல் தெரிகிறது.

இந்த அரசு, நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்வது இல்லை என்று முடிவு செய்துள்ளது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் மூலம் அதிகம் பேருக்கு வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததற்கு அரசின் தவறான முடிவுகளே காரணம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்