மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3½ லட்சமாக குறைந்தது

மராட்டியத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3½ லட்சமாக குறைந்தது.

Update: 2021-05-23 13:09 GMT
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 26 ஆயிரத்து 133 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்து 53 ஆயிரத்து 225 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 51 லட்சத்து 11 ஆயிரத்து 95 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 40 ஆயிரத்து 294 பேர் குணமாகினர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 247 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 682 பேர் ஆட்கொல்லிநோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 300 ஆக உயர்ந்து உள்ளது.

தலைநகர் மும்பையில் நேற்று 1,299 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 96 ஆயிரத்து 179 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மேலும் 52 பேர் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதுவரை தொற்றுக்கு 14 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 326 நாட்களாக அதிகரித்து உள்ளது.

தாராவியில் புதிதாக 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு 83 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்