2 நாட்களுக்கு ஊரடங்கில் தளர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 25 அரசு பஸ்கள் இயக்கம்
2 நாட்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் 25 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
திருவாரூர்,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுத்திட 24-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் மளிகை, காய்கறி கடைகளுக்கு காலை 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நோய் தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு நாளை (திங்கட்கிழமை) முதல் எந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதனால் மக்கள் நலன் கருதி நேற்று மாலை முதல் இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு வரை பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 பணிமனைகளில் இருந்து 212 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில் நேற்று மாலை 4 மணி முதல் நன்னிலம் பணிமனையில் இருந்து 4 பஸ்கள், மன்னார்குடி பணிமனையில் 7 பஸ்கள், திருத்துறைப்பூண்டி பணிமனையில் இருந்து 7 பஸ்கள், திருவாரூர் பணிமனையில் இருந்து 7 பஸ்கள் என 25 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
குறைவாக காணப்பட்ட பயணிகள் கூட்டம்
இதையடுத்து பணிமனைகளில் இருந்து பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வந்தன. அப்போது பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டது. இதனால் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக பஸ்கள் இயக்கப்பட்டன. சில பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இன்று காலை முதல் அனைத்து பகுதிக்கு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மன்னார்குடி
இதேபோல் மன்னார்குடியில் இருந்து சென்னை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று மாலை முதல் சில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ்களில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.