முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.

கும்மிடிப்பூண்டி,
முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண பணிகளுக்காக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தனது ஒரு மாத சம்பளத்தொகைக்கான காசோலையை தலைமை கொறடாவிடம் வழங்கினார்.
கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வல அமைப்புகள், பல்வேறு அறக்கட்டளைகளையினர் பலர் தொடர்ந்து நிவாரண தொகையினை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக தி.மு.க.வை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பள பணத்தை வழங்குவார்கள் என ஏற்கனவே தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வான டி.ஜெ.கோவிந்தராஜன் தனது ஒரு மாத சம்பள தொகையான ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்திற்கான காசோலையை நேற்று தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியனிடம் நேரில் வழங்கினார்.