காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் முகவர்கள் உரிமம் ரத்து
காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்றால் முகவர்கள் உரிமம் ரத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுமேலாளர் சுஜாதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் விற்பனைக்குட்பட்ட காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள ஒன்றியத்தின் சில்லறை மற்றும் மொத்த பால் விற்பனையாளர்கள் அனைவரும் கடந்த 16-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்த தமிழக அரசின் அறிவிப்பின்படி, அனைத்து பால் வகைகளுக்கும் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும்.
அதன்படி சமன் செய்யப்பட்ட பால் (ப்ளு) -லிட்டர்- ரூ.40
நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை) - லிட்டர்- ரூ.44
நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு)-லிட்டர் ரூ.48 ஆகிய விலை குறைப்பினை பின்பற்ற வேண்டும்.
மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை மேற்கொண்டால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக விலை பற்றிய புகார்களை தெரிவிக்க தலைமை அலுவலகம் -9445700624, 9840505277
திருவள்ளூர் -8015589455, காஞ்சீபுரம் -9789832726 மற்றும் செங்கல்பட்டு -8778920433 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.