அன்னூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

அன்னூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2021-05-23 00:02 GMT
அன்னூர்,

அன்னூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நபி. இவர் தனது காரில் சொந்தவேலை காரணமாக குடும்பத்தினர் 3 பேருடன் அன்னூர் வந்தார். பின்னர் அன்னூரில் இருந்து புளியம்பட்டிக்கு காரில் குடும்பத்துடன் புறப்பட்டார். கணுவக்கரை ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

 ஆம்போதி நால் ரோடு சந்திப்பில் வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. தொடர்ந்து காரின் முன்பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதையடுத்து அப்துல் நபி காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்தினர் 3 பேருடன் கீழே இறங்கி உயிர் தப்பினார். 

இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக வந்தவர்கள் அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்