வெளிநபர்கள் வராமல் இருக்க தடுப்பு வைத்த கிராம மக்கள்
சத்தியமங்கலம் அருகே கொரோனா பரவுவதை தடுக்க வெளிநபர்கள் வராமல் இருப்பதற்கு கிராம மக்கள் தடுப்புகளை வைத்துள்ளனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ளது சதுமுகை கிராமம். இங்கு கொரோனா தொற்று பரவுதலை தடுக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெளிநபர்கள் வராமல் இருக்க ஊரின் தொடக்கத்தில் தடுப்புகளை வைத்துள்ளனர்.
அதில், ‘வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை. தடை செய்யப்பட்ட பகுதி’ என எழுதி தொங்கவிட்டுள்ளனர். மேலும் ஊரில் இருப்பவர்கள் வெளியே செல்வதை தடுக்கும் வகையில், ‘தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்’ என்ற அறிவிப்பும் வைத்துள்ளார்கள்.