கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு
ஏர்வாடியில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறக்கப்பட்டது.
ஏர்வாடி, மே:
ஏர்வாடி தெற்கு மெயின் ரோடு லெப்பை வளவு பள்ளிவாசல் எதிரில் கொரோனா பேரிடர் உதவி மைய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மண்டல செயலாளர் அமீன், மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, நகர தலைவர் அஷ்ரப் அலி, எஸ்.டி.பி.ஐ. தொகுதி துணைத்தலைவர் மர்ஹபா ஷேக், நகர தலைவர் சேக் முகமது, சி.பி.சி. குழுமத்தின் தலைவர் ஆசாத், லெப்பை வளவு ஜமாத் முத்தவல்லி உமர் பாரூக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொேரானா நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரமும், கபசுர குடிநீர் பொடிகளும் வழங்கப்பட்டன.